யாத்திரை
பயணத்திட்டம்:( 9
நாட்கள்
யாத்திரை)
ஆகஸ்ட் 14
(சனி) -
காலை
சென்னையில்
இருந்து
கிளம்புதல் [
கரிப்
ரத் ]
ஆகஸ்ட் 15
(ஞாயிறு)-காலை
(டெல்லி)
நிசாமுடின்
அடைதல்
ஆகஸ்ட் 15
(ஞாயிறு)-மதியம்
நிஜாமுடினில்
இருந்து
ஹர்துவார்
செல்லுதல்
ஆகஸ்ட் 15
(ஞாயிறு)-
மாலை -
ஹர்துவார்
அடைதல்[
அங்கே
நிறைய
விடுதிகள்,
மடங்கள்
உள்ளன)
ஆகஸ்ட் 16
-(திங்கள்) -
காலை - ஹர்துவாரில் இருந்து
கவுரி
குண்டம்
செல்லுதல் [
சிற்றுந்து
மூலம்]
ஆகஸ்ட் 16
-(திங்கள்) -
மாலை -
கவுரி
குண்டம்
அடைதல்.
(இரவு
அங்கேயே
விடுதி
வாடகைக்கு
எடுத்து
தங்குதல்)
ஆகஸ்ட் 17
-(செவ்வாய்)-
காலை 7
மணிக்கு
திருக்கேதாரம்
நோக்கி
நடை
யாத்திரை
தொடங்குதல்....(பதினான்கு
கிலோமீட்டர்கள்)
ஆகஸ்ட் 17
-(செவ்வாய்) -
மாலை -
திருக்கேதாரம்
அடைதல்......
ஆகஸ்ட் 17
-(செவ்வாய்) -
சாயுங்காலம் -
திருக்கேதாரனாதர்
அலங்கார
தரிசனம்
(இரவு
திருகேதார
நாதருக்கு
அருகிலேயே
விடுதி
எடுத்து
தங்குதல்)
ஆகஸ்ட் 18
-(புதன்)-
காலை
---நாமே
இறைவரை
தொட்டு
பூஜை
செய்தல்.....
ஆகஸ்ட் 18
-(புதன்)-
காலை -
கவுரி
குண்டம்
இறங்குதல்......
ஆகஸ்ட் 18
-(புதன்)-
மாலை -
கவுரிகுண்டத்தில்
இருந்து
பத்ரிநாத்
நோக்கி
செல்லுதல்.....[வழியில்
ஏதாவது
இடத்தில
விடுதி
எடுத்து
தங்குதல்)
ஆகஸ்ட் 19
-(வியாழன்) -
காலை -
மீண்டும்
பத்ரி
நோக்கி
செல்லுதல்
ஆகஸ்ட் 19
-(வியாழன்) -
மாலை -
பத்ரி
நாதர்
தரிசனம்
(இரவு
அங்கேயே
தங்குதல்)
ஆகஸ்ட் 20
-(வெள்ளி) -
காலை -
ஹர்துவார்
நோக்கி
கிளம்புதல்,
ஆகஸ்ட் 20
-(வெள்ளி)
-மாலை -
ஹர்துவார்
அடைதல்....(ஹர்துவாரில்
கங்கா
ஆரத்தி
பூஜை
பார்த்தல்)
ஆகஸ்ட் 21 -
(சனி)-காலை-ஹர்துவாரில்
இருந்து
டெல்லிக்கு
ரயிலில்
கிளம்புதல்.
ஆகஸ்ட் 21 -
(சனி)-மதியம் -
டெல்லி
அடைதல்
ஆகஸ்ட் 21 -
(சனி)-இரவு-
சென்னைக்கு
கிளம்புதல்(தமிழ்நாடு exp
)
ஆகஸ்ட் 23 -
(திங்கள்)-காலை -
சென்னை
சென்ட்ரல்
அடைதல்
யாத்திரை
குழு
விவரம்:
1 ) விஜய்,
சிவா
2) ஸ்டாலின்
3 ) செந்தில்,
கார்த்திகா,
தேவேஷ்வரன்,
4 ) எத்திராஜன்,
பிரியா,
சந்தியா,
சௌந்தர்யா,
மாதவன்,
விஜயலட்சுமி
5 ) அருண்காந்தி
6 ) ஆனந்தன்
7 ) பாபு
8 ) பாலாஜி
9 ) மணி
10 ) ராமலிங்கம்,
11 ) ராஜா MG
12 )ராஜா
மொத்தம்
இருபது
பேர்கள்
வழக்கமான
பயண
திட்டத்தில்
ஏற்படுவதுபோல்
சிலர்
வருவதாக
கூறி
டிக்கெட்
புக்
செய்தோம்
ஆனால்
அவர்களால்
வர
இயலவில்லை.....வேறு
சிலர்
வருவதாக
கூறி,
அவர்கள்
டிக்கெட்டில்
சிலர்
மாறி
பயணித்து
வந்தனர்.....
மேலே
குறிப்பிட்ட
பயண
முனஎர்பாடுகள்
படி,
டிக்கெட்டுகள்,
விடுதி
முன்பதிவு,
வாகன
முன்பதிவு
அனைத்தும்
ஆயிற்று.........
பயணத்திற்கு
தேவையான
பொருட்களை
எடுத்து
வைத்தோம்.....
பயணத்தில் 4 .5
வயது
சிறார்
முதல் 67
வயது
முதியோர் ,
மற்றும்
பெண்கள்
இருந்ததனால்
மிக
கவனத்துடன்
பொருட்களை
எடுத்து
வைத்தோம்......
பயண
நாள்
வந்தது.........
இனி ஸ்டாலின் தொடர்கிறார்..............
##
பிறப்பென்றால்
யாதென்று
இறைவனை
கேட்டேன்
பிறந்து
பார்
என்று
இறைவன்
சொன்னார்
இறப்பென்றால்
யாதென்று
இறைவனை
கேட்டேன்
இறந்து
பார்
என்று
இறைவன்
சொன்னார்
மனையாள்
சுகமெனில்
யாதென்று
இறைவனை
கேட்டேன்
மணந்து
பார்
என்று
இறைவன்
சொன்னார்
அத்தனையும்
அனுபவித்தே
தெரிந்துகொள்ள
வேண்டும்
என்றால்
இறைவா
நீ
எதெற்கு
என்று
இறைவனை
கேட்டேன்
இறைவன்
சொன்னார்
அந்த
அனுபவமே
நான்தானடா
என்று"
-கண்ணதாசன்
இவ்வுலகத்தில்
உள்ள
அனைத்து
உயிர்
இனங்களிற்கு
ஏற்படும்
ஒவ்வொரு
அனுபவங்களிலும்
இறைவன்
இருக்கின்றார்
என்பது
இப்பயணத்தின்போது
நாங்கள்
உணர்ந்தோம்.
இல்லை
இல்லை
நான்
உணர்ந்தேன்.
நான்
என்பதுகூட
தவறு.
இங்கே
நான்,
நீ,
அது,
இது
என்று
எதுவுமே
இல்லை.
எல்லாம்
ஒன்றே .
அது
பரப்ரம்மம் ,
சக்தி ,
ஈசன்
,புத்தர் ,
இயேசு ,
அல்லா.
அவரவர்
விருப்பம்போல்
நாம்
பெயரிட்டுகொள்கின்றோம்.
இறைவன்
எங்கிருக்கிறார்
என்ற
கேள்விக்கு
என்
பதில்
அது
(இறை )
எல்லா
இடத்திலும்
நீக்கமற
நிறைந்திருக்கிறது
என்பதே
ஆகும்.
அதாவது
உங்களிடத்தில் ,
என்னிடத்தில் ,
எல்லா
உயரினங்களிடத்திலும் ,
மலை
,செடி
,கொடி
,அருவி
,வெளி
,ஆகாயம்
,பூமி
என்று
எல்லா
இடத்திலும் .
பிறகெதற்கு
இறைவனை
தேடி
இப்பயணம்?.
.
.
.
.
.
.
.
.
.
. அனுபவம்
.
இப்பயணத்தின்போது
ஏற்பட்ட
ஒவ்வொரு
நிகழ்வுகளிலும்
இது
(நான் )
அதை
(இறை )
உணர்ந்தது
அல்லது
உணர
முயற்ச்சித்தது
.அறிந்தது
அல்லது
அறிய
முயற்ச்சித்தது .
ஓம்
நமசிவாய .
ஓம்
நமோ
நாராயணாய
.
ஜெய்
கேதர்நாத்கி
ஜெய் .
ஜெய்
பத்ரிநாத்கி
ஜெய்
.
14.08.2010 அன்று
காலை
சென்னை
சென்ட்ரலில்
ரயில்
நிலையத்தில்
இருந்து
கரீப்
ரத்
நிசாமுதின்
எக்ஸ்ப்ரஸில்
எங்கள்
பயணம்
ஆரம்பித்தது .
15.08.2010 அன்று
பிற்பகல் 10.30
மணிக்கு
நிசாமுதின்
செல்ல
வேண்டிய
ரயில் 2
மணி
நேர
கால
தாமதத்திற்கு
பிறகு
மதியம் 12.30
மணிக்கு
சென்றடைந்தது. 11.30
மணிக்கு
நாங்கள்
முன்பதிவு
செய்திருந்த[ஹர்துவாருக்கு]
ஹர்துவார்
ரயில்
சரியாக 11.30
மணிக்கு
சென்றுவிட்டது .
பிறகு 3
மணி
ரயில்
பிடித்து
இரவு 8.30
மணிக்கு
ஹர்துவார்
வந்தடைந்தோம் .
அங்கே
ஏற்கனவே
தொலைபேசி
மூலம்
முன்பதிவு
அறைகள்
செய்து
வைத்திருந்த
ஐயப்ப
மடத்தில்
இரவு
உணவு
முடித்து
அங்கேயே
தங்கினோம்.தூங்கினோம்.
16.08.2010 அன்று
காலை
எழுந்து,
இறைவனின்
தலைபாகத்தில்
இருந்து
வழியும்
நீண்டு
நெடும்தூரம்
ஓடும்
குளிர்
கங்கையில்
குளித்து ,
அய்யப்ப
மடத்திலேயே
உணவருந்தி
எங்களுக்கென்று
முன்பதிவு
ஏற்பாடு
செய்திருந்த
தனியார்
சிற்றுந்தில்
ஏறி
சரியாக 8
மணிக்கு
திருக்கேதாரம்[கெளரிகுண்டம்]
நோக்கி
பயணம்
புறப்பட்டோம்
.
இரு
புறமும்
விண்ணைமுட்டி
நிற்கும்
மலைகள் .
நடுவே
மிகுந்த
ஆவேசத்தோடு
ஓடும்
நதி .
சிற்றுந்து
மட்டுமே
செல்லக்கூடிய
பாதை .
ஹர்துவாரில்
இருந்து
ரிஷிகேஷ் 25
கிலோமீட்டர்கள் .
ரிஷிகேஷில்
இருந்து
கேதாரம் 223
கிலோ
மீட்டர்கள்.
இங்கிருந்து
தொடங்குகிறது
மலை
பாதை . 223
கிலோமீட்டர்களும்
நம்மை
தொடர்கிறது
மலைகள் ,
அருவிகள்
மற்றும்
நதி.
பார்ப்பதற்கு
ரம்மியமாகவும் ,
அழகாகவும் ,
மிரட்ச்சியாகவும்
இருக்கிறது .
வழியில்
உணவுக்காகவும்
தேநீருக்காகவும்
சிற்றுந்து
நிறுத்தப்பட்டது....
பேருந்தில்
குழந்தைகள்
நாங்கள்,
பெரியவர்கள்
அனைவரும்
பேசிக்கொண்டும்
உறங்கிக்கொண்டும்
இறை
பாடல்கள்
கேட்டுக்கொண்டும்
பயணத்தை
தொடர்ந்தோம்..........
வழியில்
நண்பர்
எத்திராஜன்
தந்தைக்கு
சிறிது
உடல்நலமில்லாமல்
சென்று
விட்டது....அவரை
நன்றாக
உறங்க
சொல்லி
படுக்க
வைத்தோம்......
காலை 8
மணிக்கு
ஆரம்பித்த
பயணம்
[ரிஷிகேஷ்,
ருத்ரப்ரயாக்,
அகஸ்த்முனி,
உக்கிமத்
வழியாக
சென்று
இரவு
8.15.க்கு
கெளரிகுண்டம்
வந்தடைந்தது .
முக்கியமான
விஷயம்
மலைப்பாதையில்
வாகனங்கள்
காலை 6
மணி
முதல்
இரவு 8
மணி
வரை
மட்டுமே
அனுமதிக்கபடுகின்றன
.
இரவு
கௌரிகுண்டதிலேயே
விடுதி
வாடகைக்கு
பேசி,
அங்கேயே
இரவு
தங்கினோம்.......
வாழ்வின்
முதன்முறையாக
இமயத்தில்
பிரயாணம்
செய்த
பிரமிப்புடனும்,
அடுத்த
நாள்
வாழ்வில்
முதல்முறையாக
இமாலய
இறைவரை
தரிசிக்க
போகும்
பரபரப்புடனும்
தூங்கினோம்.....
மறுநாள்
இறைவர்
தரிசனம்
இந்த
ஏழைக்கு..............அருள்வாரா?
17.08.2010 அன்று
காலை
அதிகாலை
எழுந்து
கௌரிகுன்டத்தில்
உள்ள
தப்த
குண்ட்
என்ற
வெந்நீர்
குளத்தில்
குளித்து
சரியாக 6.15
க்கு
திருக்கேதாரம்
நோக்கி
நடக்க
ஆரம்பித்தோம் .
கௌரிகுன்டத்தில்
இருந்து
திருக்கேதாரம் 14
கிலோ
மீட்டர்கள். 14
கிலோ
மீட்டர்களும்
செங்குத்தாகவும்
வளைந்து
வளைந்தும்
செல்லும்
மலை
பாதை .
அகலமான
பாதை.
குதிரைகளும்
நடந்து
செல்பவர்களும்
சென்று
வரக்கூடிய
கல்
பாதை..
கௌரிகுன்டத்தில்
இருந்து
திருக்கேதாரம்
செல்ல 3
வழிகள்
தான் .
ஒன்று
நடைபயணம் .
இரண்டு
குதிரை
சவாரி .
மூன்று
டோலி
எனப்படும்
சுமைதூக்கும்
ஆட்கள்
சுமந்து
செல்வது .
இங்கு
எனக்கு
தெரிந்து
குறைந்தபட்சம் 1000
குதிரைகளாவது
உள்ளன
மனிதர்களை
சுமப்பதற்கு .
நாங்கள்
நடக்க
ஆரம்பித்தோம் .
எங்களோடு
நண்பர்
எத்திராஜன்
தந்தையும்
தாயும்
நடந்து
வர
அவர்களுக்கு
பாதுகாப்பாக
நானும்
இன்னொரு
நண்பர்
ராஜாவும்
நடக்கின்றோம் . 7
கிலோமீட்டர்கள்
மலை
ஏறியதும்
ராம்புரா
என்ற
ஊருக்கு
மதியம் 12.30
க்கு
வந்தோம்[
கணக்கு
போட்டுக்கொள்ளுங்கள் - 7
கிலோ
மீட்டர்கள்
நடக்க
கடக்க 6 .15
மணி
நேரம்.
அப்படியென்றால்
எப்படிப்பட்ட
பாதை
என்று..........[அச்சம்
வேண்டாம்]....இறைவரை
எண்ணி
நடக்கின்றோம்.......
அங்கு
ஒரு
உணவகத்தில்
கிடைத்ததை
சாப்பிட்டு
சிறிது
ஓய்வெடுத்து
மீண்டும்
நடக்க
ஆரம்பித்தோம் .
அப்போது.............
.
.
.
.
.
.
இறை - இது - அனுபவம் - பாகம் - 3ல் தொடரும்......

No comments:
Post a Comment