பாகம் 7 --ஸ்ரீ நகர் சவால்
என்னவாயிற்று , எங்கே சென்றார்கள் அந்த இருவரும் …..
?
முதல் நாள் குதிரைகாரர் பனிமலைக்கு முன்பாக இறக்கி விட்டதும் , அவர்கள் இருவர் மட்டும் ‘நாம் முன்னே செல்வோம் ’ என்று கிளம்பி , கோவிலை நோக்கி செல்லாமல் , மலையை விட்டு இறங்கும் பாதையில் இறங்கி 5 KM
வரை இறங்கிவிட்டனராம் . மணி இரவு 8 மணி ஆனதும்
…..தவறான வழியில் வந்ததை உணர்ந்து …மீண்டும் மலை ஏறி ……இரவு வழியிலே ஒரு டென்ட் ’ல் தங்கி , காலை எழுந்து இறைவனை தரிசித்து , எங்களை அவர்கள் தேடி , பின்பு மலை இறங்கியிருக்கிறார்கள்
…....
இறைவன் ஏதோ காரணத்துடன் அவர்களை இறக்கி ஏற்றி இருக்கிறார் …..
அவரின் விளையாட்டு யாருக்கு புரியும்
………………
கிளம்ப மனதின்றி.........வாழ்கையில் முதல் முறையாக
'நாயிர்கிடந்த அடியேற்கு தயாவான தத்துவன்' தன் தரிசனம் தந்தமைக்கு வணங்கி...மறுமுறை தரிசனம் தர மனதார வேண்டி,, மதியம் 4 மணி அளவில் பால்டாலை விட்டு கிளம்பினோம்
…….
van
டிரைவர் அவருக்கு தெரிந்த விடுதி ஸ்ரீநகரில் இருப்பதாகவும் அங்கே தங்கிவிட்டு காலை ஸ்ரீநகரில் சிவ தலம், தால் ஏரி மற்றும் சில இடங்களுக்கு செல்லலாம் என்றும் கூறினார்.....
வழியில் சாலை ஓரத்திலே செல்லும் நதியின் அருகில் சற்று இளைப்பாறி புகைப்படங்கள் எடுத்து கொண்டோம் ....
9.30
மணி அளவில் ஸ்ரீநகர் அடைந்தோம் ……அங்கே அந்த விடுதியில் 2 அறைகளை பதிவு செய்து , அருகிலேயே உணவு உண்டு ….ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்தோம்
….
பத்தொன்பது ஜூலை - வியாழன் –
19
காலை கிளம்பி 8 மணி அளவில் அறைகளை காலி செய்து டால் ஏரி பார்த்துவிட்டு ,
ஸ்ரீநகரில் உள்ள ‘ஸ்ரீ சங்கராச்சார்யா ’ மலை சிவன் கோவிலுக்கு சென்றோம் …..மிகுந்த கூட்டம்
…..
சங்கரநாதரை தரிசித்து , முகல் கார்டன் என்ற ‘முஸ்லிம் மதத்தினரின் நம்பிக்கையான ஊற்றில் ’ (எப்போதும் மிகுந்த சுத்தமான குடிநீர் ஊரும் இடம் ) நீர் குடித்து ,
பின்பு ஸ்ரீநகரை விட்டு கிளம்பினோம்.
5 மணிக்கு மீண்டும் ஒரு பதற்றம்
……
ராம்பன் என்ற ஊரருகில் பலத்த போக்குவரத்து நெரிசல்
………..சாலையில் பல கிலோ மீட்டர்கள் நீளத்திற்கு வண்டிகள் வரிசையில் நிற்கின்றன....ஊர்ந்து செல்கின்றன.....
Van மெதுவாக நகர்கிறது ……மறுநாள் காலை 9 மணிக்கு உஜ்ஜைனிக்கு ரயில் ….பிடித்து விடுவோமா
…….
ஒரே டென்ஷன்
…..
மிக மெதுவாக ராம்பனை அடைந்த நேரம் நள்ளிரவு 11
மணி …… அங்கிருந்து சுமார் 160 KM
ஜம்மு
…..
டென்ஷன் உச்சத்திற்கு போயிற்று ……
தூங்காமல் சாலையை பார்த்தபடி , van
டிரைவரை பார்த்தபடி உட்கார்ந்திருந்தோம்
……..
ஜூலை 20
வெள்ளி
:
அதிகாலை , 3
மணி அளவில் டிரைவர் உதம்பூரில் (ஜம்முவில் இருந்து 60 KM
தொலைவு ) உள்ள அவரது வீட்டிற்கு
சென்று , 2
மணி நேரம் ஓய்வு எடுத்து வருவதாக கூறினார் .
நாங்கள் அனைவரும்
van-லேயே அமர்ந்தபடியே உறங்கினோம்
………
பின்பு 5 மணி அளவில் டிரைவர் மீண்டும் வந்து கிளம்பி சுமார் 7 மணி அளவில் ஜம்மு ரயில் நிலையத்தில் இறக்கி விட்டார்
…..
இறைவன் கருணையாலும் ஆசியாலும் திட்டமிட்டபடி ஜம்மு வந்து சேர்ந்து விட்டோம்.......
நாங்கள் முன்பதிவு செய்த வாகனத்தை ((Tempo Traveller
Pushback)) தராவிட்டாலும் , பேசிய பணத்தை தந்துவிட்டு
மனமார்ந்த நன்றியை தெரிவித்துவிட்டு முழு திர்ப்தியுடன் சூடாக தேனீர் அருந்தினோம்
…..
உடன் வந்த அன்பர்கள், காஷ்மீர் ஆப்பிள், துணிமணிகள் வாங்கினர்.
பின்பு , ரயில் நிலையத்திலேயே குளித்துவிட்டு 9 மணிக்கு உஜ்ஜைன் செல்லும் ரயிலில்[மால்வா exp ]
ஏறி அமந்தோம்
….
தரிசன அனுபவங்களை அசை போட்டபடி.......பயணம்.................
உஜ்ஜைனியை நோக்கி........
உஜ்ஜைனியை நோக்கி........
பாகம் 8 - உஜ்ஜைனி உற்சாகம்.....தொடரும்.....

No comments:
Post a Comment