Facebook Badge

Sunday, March 17, 2013

அமர நாதர் அழைக்கிறார்.. பாகம் 6 - விஸ்வரூபம்

பாகம் 6 - விஸ்வரூபம்.....
வெள்ளிப்பனி  மலை  ஆரம்பம் ……….

குதிரையில் இருந்து இறக்கிவிடப்பட்ட இடத்தில இருந்து நடக்க ஆரம்பித்தோம்......

வழியில்  லங்கரில் தேனீர் , முறுக்கு சாப்பிட்டபடி , பனி  கட்டிகளை  கையில்  எடுத்து  பார்த்தபடி  நடந்தோம் ....







அதோ.......தூரத்தில் அமர நாதரின் குகை தெரிகிறது......












ஆஹா......
ஆனந்தம்.....

இறைவனின் திருவருளால் திட்டப்படி பதினேழு அன்றே குகையை நெருங்கிவிட்டோமே என்று ஆனந்தத்தில்...நடை வேகம் எடுத்தோம்........

மாலை  சரியாக  5.50 மணிக்கு  அமரநாதரின் விஸ்வரூபம்.........
பிரம்மாண்டமாக ………………..

மிகுந்த  நேரத்தை  அவர்  அருகிலேயே  செலவிட்டோம் ….
உடன் எடுத்து  சென்ற  இறை  வழிபாட்டு  புத்தகத்தில்  இருந்து  ‘மந்திரம்  ஆவது  நீறுபதிகத்தையும் , ‘பிரம்ம முராரி சுரார்சித …….’ லிங்காஷ்டகம்
மற்றும்  ‘நமச்சிவாய  வாழ்க ……….’சிவபுராணத்தையும் மனமுருக வாசித்தோம்
அமரநாதர்  முன்னிலையில் ………….(எழுதும்போதே மயிர்க்கூச்செறிகிறது…………)

நண்பர்கள் , உற்றார் உறவினர்கள், மரியாதைக்குரியவர்கள் , தெரிந்தவர்கள் , தெரியாதவர்கள், அனைவரின்  நலனுக்காகவும் பிரார்த்தனை  செய்து விட்டு ,திரும்ப மனமே இல்லாமல் திரும்பினோம்.....

கொண்டு சென்ற ப்ளூ- form எங்கேயும் கேட்கப்படவில்லை........

மெதுவாக இறங்கிக்கொண்டே அந்த இருவரையும் தேடிக்கொண்டே வந்தோம்....
7 மணி  அளவில் , அந்த  இருவரையும்  தேடி பார்த்தோம் …..அவர்கள்  காணவில்லை……. இறைவனின்  சோதனையை எண்ணியபடி , அமரநாதருக்கு அருகிலேயே  தங்கி  காலை  பார்ப்பதென முடிவு செய்து  டென்ட் வாடகைக்கு எடுத்தோம் …..

குகைக்கருகில் டென்ட் வாடகைக்கு குடுக்க நிறைய ஆட்கள் போட்டிபோடுவார்கள்....நாம் கவனத்துடன் டென்ட்- பார்த்து பின் வாடகை பேசவேண்டும்...ஏன் என்றால் அங்கே எல்லா இடங்களும் பனி மலை ஆதலால் பனியின் மேல் தெர்மொகால் எனும் சீட் விரித்து அதன்மேல் பெட்சீட் விரித்து வைத்திருப்பர்.
அதன்மேல் நம்மால் அமர்ந்து கூட இருக்க முடியாது.....
சில டெண்டுக்கள் கிடைத்த சிறிய கல்மலையில் அமைக்கப்பட்டிருக்கும்....ஆனால் வாடகை சிறிது அதிகமாக இருக்கும்...அவற்றை பார்த்து எடுத்துக்கொண்டால் கை கால்கள் நீட்டி அமர்ந்தோ படுதோ களைப்பை நீக்கி கொள்ளலாம்.

நாங்கள் வாடகைக்கு எடுத்தது கல்தரை டென்ட்.....

ஆனாலும் எங்களால் தூங்கமுடியவில்லை........குளிர்.........பசி............அசதி.............
எனவே அனைவரும் சிரம பட்டோம்......

மனம் நிறைந்திருந்ததாலும், உடல் அசதியினாலும் , மிகுந்த  குளிரினாலும்  ஏதும்  சாப்பிடாமல்  அப்படியே  படுத்து  விட்டோம்
இரவு  முழுக்க  எவருமே  தூங்கவில்லை ….
ஆனால் ஒருவரைஒருவர்  தூங்குவதாக நினைத்துக்கொண்டிருந்தோம் ………..


ஜூலை பதினெட்டு - புதன் கிழமை


காலை - 6 .15 மணிக்கு எழுந்து ரவியும் பார்த்தசாரதியும் சென்று அந்த இருவரையும் தேடி பார்த்தனர்......காணவில்லை.......மைக்-இல் அறிவிப்பு செய்தனர்....வரவில்லை..........

என்ன இது இறைவனின் சோதனை என்று எண்ணியவாறு.....9 மணிக்கு அனைவரும் குதிரை ஏறினோம்......[குதிரைக்காரர்கள் பருமனனவர்களை ஏற்ற தயங்கினர்..... எங்கள் கையை பிடித்து இழுத்தனர்.......நாங்களோ அனைவரையும் ஏற்றி விட்டு பின்னர் ஏறினோம்... நான், அண்ணன், பெரிய அண்ணன்&சிவா 3 குதிரையில் ஏறினோம்...

கீழே  இறங்கி  இருப்பார்கள்  என்ற  நம்பிக்கையுடன்  இறங்கினோம்.....

வழியில் குதிரை புல்மேய சிறிதுநேரம் நிறுத்தி, அங்கேயே தேனீர் அருந்தினோம்.....


மீண்டும் ஒரு சாகச பயணத்தை அரங்கேற்றினோம்.......

வழியெல்லாம் அந்த இருவரையும் தேடிகொண்டே வந்தோம்.......காணவில்லை......

பகல் 12. 30 மணிக்கு , ராணுவ  நண்பரின் (ஜீவா-சார்) டென்ட்  அருகே  அனைவரும்  இறங்கி , அவரை  காண  சென்றோம் ….நன்றி  கூறவும்அப்படியே  இருவரை  காணவில்லை  என்று  கூறவும் ……ஆனால் அவரோ  duty-க்கு சென்று  விட்டார்.
ஆனால்  அவரது  டென்ட் -ல்  இருந்த  வட-இந்திய  பணியாள் நண்பர், மிகுந்த  அன்புடன்  தேனீர் கொடுத்தார்.
தேனீர் அருந்திவிட்டு  ராணுவ  நண்பரிடம்  கூறிவிடுமாறு சொல்லிவிட்டு  மீண்டும்  2 பேரை  தேடி  சென்றோம் …..
பால்டாலில் பல  இடங்களில்  தேடி , அங்கங்கே நம்முடன்  வந்த  அடியவர்களை  நிறுத்தி ….van  அருகே  சென்று  பார்த்தோம்அங்கேயும் காணவில்லை …."

பதற்றம்...

இருவரை  van அருகே  இருக்க  சொல்லிவிட்டு மீண்டும்  அவர்களை  தேடி  வழியெல்லாம்  கண்களால்  சல்லடை  போட்டு  தேடி  வந்தால் ………,
அதோ ……அந்த  இருவரும் ………………..

அப்பாடா...…….அமரநாதா.....என்ன  உங்கள்  திருவிளையாட்டுஎன்று  மனதில்  வேண்டிக்கொண்டு  அவர்களை 
கட்டி  தழுவி …..van அருகே  செல்லுமாறு  கூறிவிட்டு , ஆங்காங்கே நிறுத்தியிருந்த நம்  மற்ற  அடியவர்களை  அழைத்து  வந்தோம் …."

என்னவாயிற்று , எங்கே  சென்றார்கள் அந்த  இருவரும் ….. ?

பாகம் - 7.... ஸ்ரீநகர் சவால்.......தொடரும்.......

No comments:

Post a Comment