ஜூலை 21 சனி :
நண்பகல் 11.30 மணி அளவில் உஜ்ஜைன் ரயில் நிலையத்தை அடைந்தோம் ……..
ஏற்கனவே அடியார் அஷ்வின்ஜி அய்யா மூலம் ஒம் சுவாமிஜி என்ற குருஜி -யின் அறிமுகமும் ஆசியும் கிடைத்திருந்தது .
அவரை சென்னையிலேயே சந்தித்திருந்தோம் . அவர் உஜ்ஜைன் கோவில் அருகில் ஆஷ்ரம் நடத்துவதாகவும் நாங்கள் வரும்போது தொடர்புகொள்ள சொல்லிருந்தார் .
அதனால் அவரை தொடர்பு கொண்டபோது அவர் அன்றைய தினம்தான் ஓம் கார நாதரை தரிசிக்க செல்வதாக கூறினார் …எனவே அவரை அங்கே சந்திக்க முடியாமல் போனது ….
உஜ்ஜைன் ரயில் நிலையத்தில் விட்டு வெளியே வந்ததும் நிறைய ஆடோக்காரர்கள் சூழ்ந்துகொண்டனர் ….
ஆறு கோவில்கள் உள்ளனஎன்றும் அதைக்காண ஒரு ஆட்டோவுக்கு ரு 400 கட்டணம் என்றும் கூறினர்.
சரியென்று ஏறி , கீழ்கண்ட ஆலயங்களுக்கு சென்று மனமார இறைவனை பல வடிவங்களில் கண்டு மனநிறைவு கண்டோம்.
1) ஸ்ரீ கிருஷ்ணர் , ஸ்ரீ பலராமர் , குசேலர் படித்த ஆஷ்ரம்
2) ஸ்ரீ மங்கள்நாத் ஆலயம் (செவ்வாய் அதிபதி )
3) ஸ்ரீ காலபைரவர் ஆலயம்
4) சிவ சித்தர் பட்டினத்தாரின் சீடர் பத்திரகிரியாரின் இஷ்ட தெய்வம் உஜ்ஜைனி மாகாளி கோவில்
6) விக்கிரமாதித்தன் ஆலயம்
7) ஸ்ரீ பார்வதி ஆலயம் (இந்த ஆலயத்தில் ஸ்ரீ பார்வதி தேவி பூஜித்து வழிபட்ட ஒரு மரம் இன்றும் வுள்ளது )
பின்பு ஸ்ரீ மஹா காளேஷ்வர் ஆலயத்திற்கு (ஜ்யோதிர்லிங்க தலங்களில் ஒன்று ) இறைவனை தரிசிக்க சென்றோம் .
நீண்ட வரிசையில் நின்று , இறைவனை அபிஷேக கோலத்தில் கண்ணார கண்டு வெளியில் வந்தோம் .
பின்பு மஹா கணபதி கோவிலுக்கு சென்று இந்த ஆண்டின் யாத்திரையை இறைவர் ஈசனின் பெயரால் நிறைவு செய்தோம் ……
7.40
மணிக்கு உஜ்ஜைன்ல் இருந்து போபாலுக்கு ரயில் ஏறி போபால் 11.45
மணி அளவில் அடைந்தோம் .
நள்ளிரவை போபால் ரயில் நிலையத்தில் கழித்து , மறுநாள் ஜூலை 22 ஞாயிறு காலை 5.30
மணிக்கு சென்னை செல்லும் GT
எக்ஸ்பிரஸ்ல் ஏறி தரிசன நினைவுகளை சுமந்தபடியும் மறுமுறை தரிசன அனுபவம் அருள இறைவனை வேண்டியபடியும் ஜூலை 23
திங்கள் கிழமை காலை சென்னை வந்து சேர்ந்தோம்
.
ஒம் நமசிவாய...........
பயனுள்ள முக்கிய குறிப்புகள்:
பயண செலவு
:
ஒருநபருக்கான செலவு குறிப்பு : (van +
வழி செலவு 11 பேருக்குண்டான மொத்த செலவில் ஒருவருடைய பங்கு
)
ரயில் டிக்கெட் -
3669
Van சார்ஜ் - 2091
வழி செலவு - 1500
தனி செலவு -
500
குதிரை - 2500
(ஏற, இறங்க)
மொத்தம் - ரு.
10260
செல்பவர்களுக்கான ஆலோசனை குறிப்புகள்:
1 - கோவில் திறந்திருக்கும் காலம் - ஜூன் கடைசி வாரம் முதல் ஆகஸ்ட் முதல் வாரம். எனவே தங்களது பயணத்திட்டத்தை ஜூலை மாதத்தில் திட்டம் இடவும்.........
2 - ஏப்ரல் மாதம் முதல் ரயில் டிக்கெட் பதிவு செய்ய முடியும்...எனவே கவனத்துடன் ரயில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளவும்.....[தூர பயணத்திற்கு 3AC
அல்லது 2AC
பதிவு செய்துகொள்ளலாம்....[அசதி இருக்காது]
3 - மே முதல் வாரத்தில் ஜம்மு - காஷ்மீர் பேங்க்-இல் படிவம் தருவர்....
தமிழ்நாட்டிலேயே நான்கு கிளைகள் மட்டும் உள்ளன...சென்னையில் மூன்று - திநகர், மவுன்ட் ரோடு, பாரிமுனை, கோவை]. எனவே அவர்கள் தொலை பேசி என்னை தொடர்பு கொண்டு, ஒருமுறை நேரில் சென்று [மதியம் இரண்டு மணிக்கு மேல்] படிவம் கொடுக்கும் நாளை தெரிந்துகொள்ளவேண்டும்...
4 - படிவம் வாங்க அடையாள அட்டை, இருப்பிட அட்டை போதுமானது....
படிவம் வாங்கியபின் இணையத்தளத்தில் உள்ள மருத்துவ சான்றிதல் பதிவறக்கம் செய்து அதில் மருத்தவரிடம் ஒப்பம் வாங்கிக்கொள்ளவேண்டும்.
5 - பின்னர், படிவம்+மருத்துவ சான்றிதழ்+ அடையாள அட்டை+ இருப்பிட அட்டை [ஒரிஜினல்+நகல்] ஆகியவற்றை பாங்கில் அளித்தால், அவர்கள் அனைத்தையும் வாங்கிகொண்டு படிவத்தை மட்டும் திருப்பி அளித்து விடுவர்...அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
6 ] செல்லும் நபர்கள் உறுதியானவுடன் travels
[ஜம்மு முதல் பால்டால் சென்று திரும்பி வர] ஏற்பாடு செய்துகொள்ளலாம்.[அல்லது ஜம்மு வில் இறங்கி அங்கேயே புக் செய்துகொள்ளலாம்]
7 ] எடுத்து செல்லவேண்டிய பொருட்கள்.....[சிவனடியார் அஷ்வின்ஜி அவர்களின் அமர நாதர் தரிசன பயண கட்டுரையில் உள்ளது......]http://vedantavaibhavam.blogspot.fr/2010/08/2010.html
தண்ணீர் புகா பை, பஞ்சு [காதிற்கு], குல்லா, ஸ்வெட்டர், ஜெர்கின், ட்ரெக்கிங் shoe ,
சாக்ஸ், கை உறை, வாக்கிங் ச்டிச்க், தண்ணீர் பாட்டில், பிஸ்கட், டிரை ப்ரூட்ஸ், குளுகோஸ், பெயின் பாம், மாத்திரைகள், விக்ஸ், அமிர்தாஞ்சன், tissue
பேப்பர், சின்ன டவல், மூக்கு உறை, டார்ச் லைட்....[இவை அனைத்தும் பால்டாலில் கிடைக்கிறது........]
8 ]
நிறைய பணம் எடுத்து செல்ல வேண்டாம்....ஆங்காங்கே ATM
உள்ளது.....அவற்றை உபயோக படுதிக்க்கொள்ளலாம்.
9 ] இணையதளம் மூலம், ஹெலிகாப்ட்டர் கூட முன்பதிவு செய்துகொள்ளலாம்.
10 ]
பல இணையதளங்கள் தேடல் மூலம் அமரநாதம், பால்டல், ஸ்ரீநகர், ஜம்மு, போகும் வழி, வரும் வழி, மற்றும் பல தகவல்களை படித்து அறிந்து கொள்ளவேண்டும்..........
11 ]
பயணத்திற்கு போதுமான இடைவெளி விட்டுக்கொண்டு [ஓரிருநாள் அதிகமாகவே விட்டு] ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்துகொள்ளவும்...
ஜம்மு - பால்டல் = 2
நாட்கள்,
பால்டால் - அமர்நாத்ஜி குகை = நடை எனில் 1 நாள், குதிரை எனில் - 5
மணி நேரம்,
அமர்நாத்ஜி குகை - பால்டால் = நடை எனில் 1 நாள், குதிரை எனில் - 5
மணி நேரம்,
பால்டல் - ஸ்ரீநகர் = 6
மணி நேரம்
ஸ்ரீநகர் - ஜம்மு = 2
நாட்கள்
எக்ஸ்ட்ரா ஒரு நாள்........
இப்படி பயண திட்டம் தீட்டினால் மன உளைச்சலை தவிர்க்கலாம்....
12 ]
பால்டாலில் இருந்து நடந்து செல்ல காலை 3 மணி முதல் 9 மணி வரைமட்டுமே அனுமதி......
குதிரை எனில் முழுநேரம் அனுமதி
.....அதுவும் போக்குவரத்து அதிகமாக இருந்தால் நிறுத்தி விடுவர்......
13 ]
குழுவாக செல்பவர்கள் பனி மலை ஆரம்பத்தில் அனைவரும் சந்திதுகொண்டு பின்பு நடக்க ஆரம்பிக்கவும்..
14 ]
அமரநாதர் குகை அருகில் மிகுந்த குளிர் இருக்கும்.........அதற்கேற்றாற்போல் திட்டம் தீட்டவும்....அங்கே தங்குவதா? அல்லது பால்டால் திரும்பிவிடுவதா? என்று........
15 ]
அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் confirm
டிக்கட்டுகளாக வைத்துக்கொள்ளவும்.....பொதுவாக W / L confirm
ஆவதில்லை........[இந்த சீசன் டிக்கட்டுகள் அனைத்தும் agency
டிக்கெட்டுகள்....எனவே, அவர்கள் எப்படியாவது பயணித்து விடுவர். எனவே W /L
டிக்க்கடுகளை நம்ப வேண்டாம்..........
16 ]
நாங்கள் இறைவர் அமரநாதரை மட்டும் தரிசித்து விட்டு வந்தோம்......ஜம்முவில் இன்னும் சில கோவில்கள் உள்ளன...[இதே ப்ளாக்கில் http://vedantavaibhavam.blogspot.fr/2010/08/2010.htmlஅந்த தகவல்கள் உள்ளன......]அவற்றையும் சேர்த்து திட்டம் தீட்டிகொள்ளவும்........
எங்களால் முடிந்தவரை எங்களது யாத்திரை அனுபவங்களையும் தகவல்களையும் கொடுத்துள்ளோம்...........
நன்றி............
பரவச உணர்வுகளையும் பக்தி மார்கத்தையும் தழைத்தோங்க செய்யும் ஓம் ஸ்ரீ அமர்நாத்கி.................................ஜெய்......போலோ....
நமசிவாய வாழ்க...நாதன்தாள் வாழ்க...

நன்றி............
ReplyDeleteபரவச உணர்வுகளையும் பக்தி மார்கத்தையும் தழைத்தோங்க செய்யும் ஓம் ஸ்ரீ அமர்நாத்கி.................................ஜெய்......போலோ....
நமசிவாய வாழ்க...நாதன்தாள் வாழ்க...
Great sharing...
Sivanarul Vilaiga