Facebook Badge

Showing posts with label amarnath yatra. Show all posts
Showing posts with label amarnath yatra. Show all posts

Tuesday, March 19, 2013

அமரநாதர் அழைக்கிறார் பாகம் 7 --ஸ்ரீ நகர் சவால்

பாகம் 7 --ஸ்ரீ நகர்  சவால்


என்னவாயிற்று , எங்கே  சென்றார்கள் அந்த  இருவரும் ….. ?

முதல்  நாள்  குதிரைகாரர்  பனிமலைக்கு  முன்பாக  இறக்கி  விட்டதும் , அவர்கள்  இருவர்  மட்டும்  ‘நாம்  முன்னே  செல்வோம் ’ என்று  கிளம்பி , கோவிலை  நோக்கி  செல்லாமல் , மலையை  விட்டு  இறங்கும் பாதையில்  இறங்கி  5 KM வரை  இறங்கிவிட்டனராம் . மணி  இரவு  8 மணி  ஆனதும்  …..தவறான  வழியில்  வந்ததை  உணர்ந்துமீண்டும்  மலை  ஏறி ……இரவு  வழியிலே  ஒரு  டென்ட்ல்  தங்கி , காலை  எழுந்து  இறைவனை  தரிசித்து , எங்களை  அவர்கள்  தேடி , பின்பு  மலை  இறங்கியிருக்கிறார்கள் …....

இறைவன்  ஏதோ  காரணத்துடன்  அவர்களை  இறக்கி  ஏற்றி  இருக்கிறார் …..
அவரின்  விளையாட்டு  யாருக்கு  புரியும் ………………

கிளம்ப மனதின்றி.........வாழ்கையில் முதல் முறையாக 
'நாயிர்கிடந்த அடியேற்கு தயாவான தத்துவன்' தன் தரிசனம் தந்தமைக்கு வணங்கி...மறுமுறை தரிசனம் தர மனதார வேண்டி,மதியம்  4 மணி  அளவில்  பால்டாலை  விட்டு  கிளம்பினோம் …….

van  டிரைவர் அவருக்கு தெரிந்த விடுதி ஸ்ரீநகரில் இருப்பதாகவும் அங்கே தங்கிவிட்டு காலை ஸ்ரீநகரில் சிவ தலம், தால் ஏரி மற்றும் சில இடங்களுக்கு செல்லலாம் என்றும் கூறினார்.....

வழியில் சாலை ஓரத்திலே செல்லும் நதியின் அருகில் சற்று இளைப்பாறி புகைப்படங்கள் எடுத்து கொண்டோம் ....




















9.30 மணி  அளவில்  ஸ்ரீநகர்  அடைந்தோம் ……அங்கே  அந்த  விடுதியில்  2 அறைகளை பதிவு  செய்து , அருகிலேயே உணவு  உண்டு ….ஆழ்ந்த  தூக்கத்தில்  ஆழ்ந்தோம் ….

பத்தொன்பது ஜூலை - வியாழன் – 19

காலை  கிளம்பி  8 மணி  அளவில்  அறைகளை  காலி  செய்து டால் ஏரி பார்த்துவிட்டு




ஸ்ரீநகரில் உள்ள  ‘ஸ்ரீ  சங்கராச்சார்யாமலை  சிவன்  கோவிலுக்கு  சென்றோம் …..மிகுந்த  கூட்டம் …..
சங்கரநாதரை  தரிசித்து , முகல்  கார்டன்  என்ற  ‘முஸ்லிம்  மதத்தினரின்  நம்பிக்கையான ஊற்றில் ’ (எப்போதும்  மிகுந்த  சுத்தமான  குடிநீர்  ஊரும்  இடம் ) நீர்  குடித்து





பின்பு  ஸ்ரீநகரை  விட்டு  கிளம்பினோம்.

5 மணிக்கு  மீண்டும் ஒரு பதற்றம்  ……

ராம்பன்  என்ற  ஊரருகில்  பலத்த  போக்குவரத்து  நெரிசல் ………..சாலையில் பல கிலோ மீட்டர்கள்  நீளத்திற்கு வண்டிகள் வரிசையில் நிற்கின்றன....ஊர்ந்து செல்கின்றன.....








Van மெதுவாக  நகர்கிறது ……மறுநாள்  காலை  9 மணிக்கு  உஜ்ஜைனிக்கு  ரயில் ….பிடித்து விடுவோமா …….

ஒரே டென்ஷன் …..

மிக  மெதுவாக  ராம்பனை அடைந்த  நேரம்  நள்ளிரவு  11 மணி …… அங்கிருந்து  சுமார்  160 KM ஜம்மு …..

டென்ஷன்  உச்சத்திற்கு போயிற்று ……

தூங்காமல்  சாலையை  பார்த்தபடி , van டிரைவரை பார்த்தபடி  உட்கார்ந்திருந்தோம் ……..

ஜூலை  20  வெள்ளி :

அதிகாலை , 3 மணி  அளவில்  டிரைவர்  உதம்பூரில்  (ஜம்முவில்  இருந்து  60 KM தொலைவு ) உள்ள  அவரது  வீட்டிற்கு 
சென்று , 2 மணி  நேரம்  ஓய்வு  எடுத்து  வருவதாக  கூறினார் .
நாங்கள்  அனைவரும்  van-லேயே  அமர்ந்தபடியே  உறங்கினோம் ………

பின்பு  5 மணி  அளவில்  டிரைவர்  மீண்டும்  வந்து  கிளம்பி  சுமார்  7 மணி  அளவில்  ஜம்மு  ரயில்  நிலையத்தில்  இறக்கி  விட்டார் …..

இறைவன் கருணையாலும் ஆசியாலும் திட்டமிட்டபடி ஜம்மு வந்து சேர்ந்து விட்டோம்.......

நாங்கள்  முன்பதிவு  செய்த  வாகனத்தை ((Tempo Traveller Pushback)) தராவிட்டாலும் , பேசிய  பணத்தை  தந்துவிட்டு 
மனமார்ந்த  நன்றியை  தெரிவித்துவிட்டு  முழு  திர்ப்தியுடன்  சூடாக  தேனீர்  அருந்தினோம் …..

உடன் வந்த அன்பர்கள், காஷ்மீர் ஆப்பிள், துணிமணிகள் வாங்கினர்.

பின்பு , ரயில்  நிலையத்திலேயே  குளித்துவிட்டு  9 மணிக்கு  உஜ்ஜைன்  செல்லும்  ரயிலில்[மால்வா exp ] ஏறி  அமந்தோம் ….


தரிசன அனுபவங்களை அசை போட்டபடி.......பயணம்.................
உஜ்ஜைனியை நோக்கி........

பாகம் 8 - உஜ்ஜைனி உற்சாகம்.....தொடரும்.....

Sunday, March 17, 2013

அமர நாதர் அழைக்கிறார்.. பாகம் 6 - விஸ்வரூபம்

பாகம் 6 - விஸ்வரூபம்.....
வெள்ளிப்பனி  மலை  ஆரம்பம் ……….

குதிரையில் இருந்து இறக்கிவிடப்பட்ட இடத்தில இருந்து நடக்க ஆரம்பித்தோம்......

வழியில்  லங்கரில் தேனீர் , முறுக்கு சாப்பிட்டபடி , பனி  கட்டிகளை  கையில்  எடுத்து  பார்த்தபடி  நடந்தோம் ....







அதோ.......தூரத்தில் அமர நாதரின் குகை தெரிகிறது......












ஆஹா......
ஆனந்தம்.....

இறைவனின் திருவருளால் திட்டப்படி பதினேழு அன்றே குகையை நெருங்கிவிட்டோமே என்று ஆனந்தத்தில்...நடை வேகம் எடுத்தோம்........

மாலை  சரியாக  5.50 மணிக்கு  அமரநாதரின் விஸ்வரூபம்.........
பிரம்மாண்டமாக ………………..

மிகுந்த  நேரத்தை  அவர்  அருகிலேயே  செலவிட்டோம் ….
உடன் எடுத்து  சென்ற  இறை  வழிபாட்டு  புத்தகத்தில்  இருந்து  ‘மந்திரம்  ஆவது  நீறுபதிகத்தையும் , ‘பிரம்ம முராரி சுரார்சித …….’ லிங்காஷ்டகம்
மற்றும்  ‘நமச்சிவாய  வாழ்க ……….’சிவபுராணத்தையும் மனமுருக வாசித்தோம்
அமரநாதர்  முன்னிலையில் ………….(எழுதும்போதே மயிர்க்கூச்செறிகிறது…………)

நண்பர்கள் , உற்றார் உறவினர்கள், மரியாதைக்குரியவர்கள் , தெரிந்தவர்கள் , தெரியாதவர்கள், அனைவரின்  நலனுக்காகவும் பிரார்த்தனை  செய்து விட்டு ,திரும்ப மனமே இல்லாமல் திரும்பினோம்.....

கொண்டு சென்ற ப்ளூ- form எங்கேயும் கேட்கப்படவில்லை........

மெதுவாக இறங்கிக்கொண்டே அந்த இருவரையும் தேடிக்கொண்டே வந்தோம்....
7 மணி  அளவில் , அந்த  இருவரையும்  தேடி பார்த்தோம் …..அவர்கள்  காணவில்லை……. இறைவனின்  சோதனையை எண்ணியபடி , அமரநாதருக்கு அருகிலேயே  தங்கி  காலை  பார்ப்பதென முடிவு செய்து  டென்ட் வாடகைக்கு எடுத்தோம் …..

குகைக்கருகில் டென்ட் வாடகைக்கு குடுக்க நிறைய ஆட்கள் போட்டிபோடுவார்கள்....நாம் கவனத்துடன் டென்ட்- பார்த்து பின் வாடகை பேசவேண்டும்...ஏன் என்றால் அங்கே எல்லா இடங்களும் பனி மலை ஆதலால் பனியின் மேல் தெர்மொகால் எனும் சீட் விரித்து அதன்மேல் பெட்சீட் விரித்து வைத்திருப்பர்.
அதன்மேல் நம்மால் அமர்ந்து கூட இருக்க முடியாது.....
சில டெண்டுக்கள் கிடைத்த சிறிய கல்மலையில் அமைக்கப்பட்டிருக்கும்....ஆனால் வாடகை சிறிது அதிகமாக இருக்கும்...அவற்றை பார்த்து எடுத்துக்கொண்டால் கை கால்கள் நீட்டி அமர்ந்தோ படுதோ களைப்பை நீக்கி கொள்ளலாம்.

நாங்கள் வாடகைக்கு எடுத்தது கல்தரை டென்ட்.....

ஆனாலும் எங்களால் தூங்கமுடியவில்லை........குளிர்.........பசி............அசதி.............
எனவே அனைவரும் சிரம பட்டோம்......

மனம் நிறைந்திருந்ததாலும், உடல் அசதியினாலும் , மிகுந்த  குளிரினாலும்  ஏதும்  சாப்பிடாமல்  அப்படியே  படுத்து  விட்டோம்
இரவு  முழுக்க  எவருமே  தூங்கவில்லை ….
ஆனால் ஒருவரைஒருவர்  தூங்குவதாக நினைத்துக்கொண்டிருந்தோம் ………..


ஜூலை பதினெட்டு - புதன் கிழமை


காலை - 6 .15 மணிக்கு எழுந்து ரவியும் பார்த்தசாரதியும் சென்று அந்த இருவரையும் தேடி பார்த்தனர்......காணவில்லை.......மைக்-இல் அறிவிப்பு செய்தனர்....வரவில்லை..........

என்ன இது இறைவனின் சோதனை என்று எண்ணியவாறு.....9 மணிக்கு அனைவரும் குதிரை ஏறினோம்......[குதிரைக்காரர்கள் பருமனனவர்களை ஏற்ற தயங்கினர்..... எங்கள் கையை பிடித்து இழுத்தனர்.......நாங்களோ அனைவரையும் ஏற்றி விட்டு பின்னர் ஏறினோம்... நான், அண்ணன், பெரிய அண்ணன்&சிவா 3 குதிரையில் ஏறினோம்...

கீழே  இறங்கி  இருப்பார்கள்  என்ற  நம்பிக்கையுடன்  இறங்கினோம்.....

வழியில் குதிரை புல்மேய சிறிதுநேரம் நிறுத்தி, அங்கேயே தேனீர் அருந்தினோம்.....


மீண்டும் ஒரு சாகச பயணத்தை அரங்கேற்றினோம்.......

வழியெல்லாம் அந்த இருவரையும் தேடிகொண்டே வந்தோம்.......காணவில்லை......

பகல் 12. 30 மணிக்கு , ராணுவ  நண்பரின் (ஜீவா-சார்) டென்ட்  அருகே  அனைவரும்  இறங்கி , அவரை  காண  சென்றோம் ….நன்றி  கூறவும்அப்படியே  இருவரை  காணவில்லை  என்று  கூறவும் ……ஆனால் அவரோ  duty-க்கு சென்று  விட்டார்.
ஆனால்  அவரது  டென்ட் -ல்  இருந்த  வட-இந்திய  பணியாள் நண்பர், மிகுந்த  அன்புடன்  தேனீர் கொடுத்தார்.
தேனீர் அருந்திவிட்டு  ராணுவ  நண்பரிடம்  கூறிவிடுமாறு சொல்லிவிட்டு  மீண்டும்  2 பேரை  தேடி  சென்றோம் …..
பால்டாலில் பல  இடங்களில்  தேடி , அங்கங்கே நம்முடன்  வந்த  அடியவர்களை  நிறுத்தி ….van  அருகே  சென்று  பார்த்தோம்அங்கேயும் காணவில்லை …."

பதற்றம்...

இருவரை  van அருகே  இருக்க  சொல்லிவிட்டு மீண்டும்  அவர்களை  தேடி  வழியெல்லாம்  கண்களால்  சல்லடை  போட்டு  தேடி  வந்தால் ………,
அதோ ……அந்த  இருவரும் ………………..

அப்பாடா...…….அமரநாதா.....என்ன  உங்கள்  திருவிளையாட்டுஎன்று  மனதில்  வேண்டிக்கொண்டு  அவர்களை 
கட்டி  தழுவி …..van அருகே  செல்லுமாறு  கூறிவிட்டு , ஆங்காங்கே நிறுத்தியிருந்த நம்  மற்ற  அடியவர்களை  அழைத்து  வந்தோம் …."

என்னவாயிற்று , எங்கே  சென்றார்கள் அந்த  இருவரும் ….. ?

பாகம் - 7.... ஸ்ரீநகர் சவால்.......தொடரும்.......