இறைவர் ஈசனின் பெருங்கருணையினால் கடந்த சில ஆண்டுகளாக இமயமலை இறைவாசத்தை, இறைவன் ஆணையினாலும் ஆசியினாலும் நுகர்ந்துவரும் எங்களின் சென்ற ஆண்டின் -2012] அமர நாத+ மாகாளேஷ்வர தரிசனத்தைப்பெற்ற யாத்திரைக் கட்டுரையைப் படித்து எங்களுடன் நீங்களும் தரிசன அனுபவத்தை உணர்ந்திருப்பீர்கள்.....
இங்கே இறைவன் அருளால் 2010ம் ஆண்டு நாங்கள் மேற்கொண்ட கேதார பத்ரி தரிசன யாத்திரைக் கட்டுரையை தந்துள்ளோம்.....
சென்று வந்த உடனேயே இதை எழுதிவிட்டாலும் வரன்முறை படுத்த நேரம் இல்லாததால் அப்படியே வைத்திருந்தோம்......
இப்போது இறைவன் ஆணை கிடைத்திருப்பதால்......இதோ இங்கே.....
இமயமலையில் ஹர ஹரி [கேதார்/பத்ரி]அனுபவம் -
சுந்தரர்,
திரு
ஞான
சம்பந்தர்
பாடல்பெற்ற
கேதார
நாதர்
[இமய
மலை]
தரிசன
அனுபவம்
சுந்தரர்
பாடல்:
வாள்ஓடிய
தடங்கண்ணியர்
வலையில்
அழுந்தாதே
நாள்ஓடிய
நமனார்
தமர்
நணுகாமுனம்
நுணுகி
ஆளாய்
உய்ம்மின்
அடிகட்கு
இடம்
அதுவோ
எனில்
இதுவே
நீளோடு
அரவு
அசைந்தான்
இடம்
கேதாரம்
எனீரே.”
சம்பந்தர்
பாடல்
-
தொண்டர்
அஞ்சுகளிறும்
அடக்கிச்
சுரும்பார்
மலர்
இண்டைகட்டி
வழிபாடு
செய்யும்
இடம்
என்பரால்
வண்டுபாட
மயில்
ஆல
மான்கன்றுதுள்ள
வரிக்
கெண்டைபாயச்
சுனைநீலம்
மொட்டு
அலருங்கேதாரமே.
தல
சிறப்புகள்:
2 ) பிருங்கி முனிவரின் பொருட்டு உமையம்மை இறைவனை வழிபட்டு இடப்பாகம் பெற்ற தலம்.
3 ) ஆதிசங்கரர் வடிவமைத்த தலம்......[அவரது உறைவிடம் கோவிலுக்கு அருகேயே உள்ளது]
4 ) கயிலாயத்திற்கு அடுத்து, மலை முகடே சிவ லிங்கமாக வழிபடும் திருத்தலம்.
5 ) ஜ்யோதிர்லிங்க திருத்தலங்களில் ஒன்று
கேதாரம் - முழுமுதல் இறைவர் சிவம் அருள்பாலிக்கும் தலம்.......
பத்ரி - இறைவர் விஷ்ணு பெருமான் அருள்பாலிக்கும் தலம்[108 திவ்ய தேசங்களில் ஒன்று]
இரண்டு தலங்களும் இமயமலையில் உள்ளன....வெவ்வேறு பாதையில் உள்ளன...........
2004 ஆம் ஆண்டு முதல் எங்கள் பெரிய அண்ணன் கேதார்+பத்ரி திருத்தல யாத்திரை சென்று வருகிறார்.......
2007 -ஆம் ஆண்டு நானும் பெரிய அண்ணன் மட்டும் கேதார் தரிசன யாத்திரை மேற்கொண்டோம்........[அக்டோபர் மாதம்]
2008 -ஆம் ஆண்டும் நானும் பெரிய அண்ணனும் மட்டும் கேதார்+பத்ரி தரிசன யாத்திரை மேற்கொண்டோம்[ ஜூலை மாதம்]
2009 -ஆம் ஆண்டு ஒன்பது பேர் கொண்ட சிறு குழு சென்றோம்.......[கேதார்+பத்ரி][ஜூன் மாதம்]
2010 - ஆம் ஆண்டு 18 பேர் கொண்ட குழு சென்றோம்......[நான், எனது மனைவி, மகன், எனது சிறிய அண்ணன், பெரிய அண்ணன், அவரது மகன் , நண்பர் எத்திராஜன், அவரது மனைவி, அவரது மகள்கள் இருவர், அவரது தந்தை, தாய், மற்றும் சில நண்பர்கள்] [ஆகஸ்ட் மாதம்]
2011 - ஆம் ஆண்டு 12 பேர் கொண்ட குழு சென்றோம்.....[நான், எனது மனைவி, மகன், எனது சிறிய அண்ணன், பெரிய அண்ணன், அவரது மகன், எனது மனைவியின் தங்கை மற்றும் சில நண்பர்கள்][ஜூன் மாதம்]
2012 - ஆம் ஆண்டு இறைவனின் மேன்மையான திருக்கருணையால் அமரநாதம் காணும் பேரு பெற்றோம்....[இந்த பிளாக்கிலேயே அந்த யாத்திரை அனுபவமும் வெளிவந்துள்ளது.........]
இறைவனின் திருக்கருணையால் பல ஆண்டுகளாக வெவ்வேறு மாதங்களில் கேதார் + பத்ரி தரிசன யாத்திரை மேற்கொண்டு வருவதால், சில முக்கியமான தகவல்களை தரமுடிந்துள்ளது......
கேதாரம் பத்ரி கோவில்கள் பற்றிய முக்கிய பொது தகவல்கள்:
1) தென்மாநிலங்களில் இருந்து செல்வோர் கண்டிப்பாக டெல்லி சென்றுதான் கேதார்+பத்ரி செல்லமுடியும்.....
2)கேதார்+பத்ரி+கங்கோத்ரி+யமுனோத்ரி இந்த நான்கு இமாலய திருத்தல யாத்திரைகளை இந்திமொழியில் 'சார்தாம் யாத்ரா' என்று கூறுவர்.....
நாங்கள் இதுவரை கங்கோத்ரி யமுனோத்ரி சென்றதில்லை.........இறைவன் ஆணை கிடைக்கவில்லை.........
3)கேதார்நாத் செல்லும் ரூட் - டெல்லி ---> ஹர்துவார் -----> ரிஷிகேஷ் ----> ருத்ரப்ரயாக் ---->அகஸ்த்முனி ---> உக்கிமத் -----> கவுரிகுண்டம். இங்கிருந்து 14 கிலோ மீட்டர்கள் நடந்தோ, குதிரையிலோ சுமை தூக்கிகள் மூலமாகவோ கேதரனாதர் திருக்கோவிலை அடையலாம்.....
4) பத்ரிநாத் செல்லும் ரூட் -- டெல்லி ---> ஹர்துவார் -----> ரிஷிகேஷ் ----> ருத்ரப்ரயாக்--->நந்தப்ரயாக்----->கோபெஷ்வர்------->சமோலி------>ஜ்யோஷிமத்----->விஷ்ணுப்ரயாக்-----> அனுமஞ்சட்டி ------>பத்ரிநாத். திருக்கோவில் வரை வாகன பயணம் மேற்கொள்ளலாம்....
இருகோவில்களுக்கும் ருத்ரப்ரயாக் என்னும் ஊர் தான் மத்தி.......
5)பத்ரி நாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் ஜ்யோஷிமத் என்ற இடத்தில ராணுவ கேட் இருக்கும்......மிக குறுகிய பாதை ஆதலால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் திறந்து மூடுவர்......
ஜ்யோஷிமத் தாண்டிய சில கிலோ மீட்டர்களில் மிக அபாயகரமான கற்சரிவு ஏற்படக்கூடிய மலை சந்திப்புகள் உள்ளன.....[தகவலுக்காகவும் எங்களது அனுபவத்தையும் மட்டுமே கூறுகிறோம், பயப்படவேண்டாம்]
6) ஹர்துவாரில் இருந்து கேதாருக்கும் பத்ரிக்கும் அரசு பேருந்துகள்[டீலக்ஸ்] தினமும் அதிகாலையில் கிளம்புகின்றன.......
GMOU [Garwal Motor Owners Union ] பேருந்துகள் என்று கேட்கவேண்டும்....இல்லையென்றால் தனியார் agency காரர்கள் மொயத்துக்கொள்வர்.......
7) ஹர்துவார் - கேதார்நாத்[கவுரி குண்டம்] - ஒரு நாள் [பகல்]பயணம் [290 கிலோ மீட்டர்கள்]
ஹர்துவார் - பத்ரிநாத் - ஒரு நாள் [பகல்] பயணம் - [320 கிலோமீட்டர்கள்]
தனியார் வாகனம் பேசிக்கொண்டால் வழியில் உள்ள கோவில்கள் பிராவகங்கள்[நதியும் நதியும் இணையும் இடம்] வணங்கி செல்லலாம்..[ஆனால் இவை அனைத்தும் உங்களது பயண திட்டபடியே.........]
8) கேதர்நாத் கோவில் திறந்திருக்கும் நாட்கள் -
அக்ஷய திருதியை [மே மாதம் முதல்] தீபாவளி [நவம்பர் மாதம் வரை] - மீதம் உள்ள ஆறு மதங்கள் தேவ பூஜை நடப்பதாக நம்பபடுகிறது....
9) பத்ரிநாத் கோவிலும் அதேபோன்றுதான்...பத்ரிநாத் கோவில் உற்சவர் சிலைகளை நவம்பர் மாதத்திற்கு பிறகு ஜ்யோஷிமடத்தில் வைத்து விடுவார்கள்......
10) மே முதல் ஜூன் மூன்றாம் வாரம் வரை வரை சீசன் காலம்
[வடமாநிலங்களில் கோடை விடுமுறை விடுவர்]. எனவே அங்கே அறைகள், வாகனங்கள் கிடைக்க நிறைய போட்டி இருக்கும்........ஆனால் இந்த காலம்தான் யாத்திரைக்கு ஏற்ற காலம்[வெயில் காலம்]
11) ஜூலை முதல் செப்டம்பர் வரை அறைகள், வாகனங்கள் சுலபமாக கிடைக்கும், தங்களது யாத்திரையை திட்டபடுத்திக் கொள்ளலாம்.
ஆனால் ஜூலை மாதம் முதல் மழை பெய்ய ஆரம்பித்துவிடும்...எனவே பாதைகளில் கற்சரிவு அதிகமாக இருக்கும்...எனவே பயண நாட்களை அதிகமாக வைத்துக்கொள்ளவேண்டும்.....[இரண்டு நாட்கள் எக்ஸ்ட்ரா வைத்து திட்டம் தீடிக்கொள்ளவும்]
12) கேதாரம் கோவிலில் காலை முதல் மதியம் வரை, இறைவரை நாமே தொட்டு அபிஷேகம், ஆராதனை, பூஜை செய்யலாம்...
மாலை முதல் நடை சாத்தும் வரை இறைவருக்கு அலங்காரம் செய்து விட்டிருப்பர்.
வழிபாடும் தீப ஆராதனைகளும் நடைபெறும்...........
13) கௌரி குண்டத்திலிருந்து கேதாரத்திற்கு குதிரையில் செல்பவர்கள் 4 மணி நேரத்தில் சென்று விடலாம். எனவே கேதார தரிசனம் முடித்து அன்றே கீழே இறங்கிவிடலாம்....[வயதானோருக்கு ஏற்றது]
14) நடந்து செல்பவர்கள் கேதார தரிசனம் முடித்து பின்னர், அங்கே தங்க முடியவில்லை என்றால் குதிரையில் கீழே இறங்கி விடலாம்.....
15) கேதாரத்திலும் பத்ரியிலும் விடுதிகளும் உணவகங்களும் நிறைய உள்ளன....[ரொட்டி, பருப்பு, அரிசி சதம்+தயிர், மேகி, சுவையான இனிப்புகள், தேநீர் கிடைக்கின்றது....]
16) செல்லும் வழிகளிலும் அதே நிலைதான்.....
17) பத்ரியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் 'மானா' என்ற கிராமம் உள்ளது....இந்தியாவின் தரைவழியின் கடைசி ஊர் அதுதான்.....[இந்த திசையில்], அதற்கு பிறகு ஒரு பெரிய மலை, பின் சீனா எல்லை ஆரம்பம்....இந்த ஊரில் மஹா கணபதி, மஹா பாரதம் எழுதுவதற்காக தனது தந்தத்தை வியாச முனிவருக்கு அருளிய கோவில் உள்ளது.....
அதற்கு மேல் இந்தியாவின் கடைசி தேநீர் விடுதி என்று ஒரு கடை உள்ளது......
18) பத்ரிக்கு செல்லும் வழியில் சீக்கியர்களின் புனித தலம் [ஹேமகுன்ட் சாஹிப்] உள்ளது....[செல்லும் வழியெங்கும் அவர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று கொண்டிருப்பதை காணலாம்]
எங்களது அனுபவதின் மூலம் பெறப்பட்ட பொது தகவல்கள் முடிந்தன......
இது போக பல இணையதளங்களில் நிறைய தகவல்கள் காணபடுகின்றன........
எனவே, கேதார் + பத்ரி யாத்திரை திட்டம் தீட்டுமுன் அவைகளை பார்த்து தகவல்களை தெரிந்துகொண்டு திட்டம் தீட்டினால் மிகுந்த பயனளிக்கும்.......
தற்போது யாத்திரைக்கு தேவையான முக்கிய முன் ஏற்பாடுகள் பற்றி காண்போம்.
1 ) ரயில் டிக்கெட்டுகள் (confirm டிக்கெட்டுகள்)
2 ) ஹர்துவாரில் விடுதி முன்பதிவு (இல்லாவிட்டாலும் அங்கே நிறைய விடுதிகள் மடங்கள் உள்ளன, ப்ரோக்கர்கள் நம்ப வேண்டாம்.)
3 ) வாகன முன் பதிவு (சிறிது பணம் முன்னதாக செலுத்தி பதிவு செய்து வைத்துக்கொள்ளவேண்டும்)
4 ) குளிர், மழை சமாளிக்கக்கூடிய பொருட்கள் எடுத்துகொள்ளவேண்டும்....ஸ்வெட்டர், ஜெர்கின், குல்லா, கை உறை, தண்ணீர் புகா பை, குளுகோஸ், மற்றும் அத்தியாவசிய மருந்துபொருட்கள்(தலைவலி, உடல்வலி, விக்ஸ்,)
5 ) பயண திட்டப்படி உடன் வரும் அடியவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இனி எங்களது யாத்திரை பயண அனுபவங்களை காண்போமா.........
இந்த யாத்திரை பயண கட்டுரை எனது சிறிய அண்ணனால் [ ஸ்டாலின்] எழுதப்பட்டது......
அவர் முதல்முறை கேதாரர் - பத்ரி நாதர் தரிசனம் பெற்ற அனுபவம்
பாகம் 2ல்.........
இறைவனின் கருணை - தொடரும்.....
பாகம் 2ல்.........
இறைவனின் கருணை - தொடரும்.....

இறைவனின் கருணை.
ReplyDeleteAshwinji