நாராயணன் பெருமை
19.08.2010 காலை 7.10
க்கு
சந்திரபுரியில்[ கவுரிகுண்டத்தில் இருந்து
பத்ரி
நாதர்
ஆலயம்
செல்லும்
வழியில்
உள்ள
ஊர்]
அறையை
காலி
செய்துவிட்டு,
மீண்டும்
பயணம்
ஆரம்பம். 9.15
க்கு
ஆள்
அரவமற்ற
மலைப்பாதையில்
எங்கள்
வண்டி
மட்டும்
நின்றது.
காரணம்
பாதையில்
மலைசரிவு.
பெரிய
பாறை
ஒன்று
மலையில்
இருந்து
உடைந்து
பாதையை
அடைத்து,
விட்டேனா
வழியை
என்றது.
ஒன்றன்பின்
ஒன்றாக
வண்டிகள்
சேர்ந்தது .
அனைவரும்
ஒன்று
சேர்ந்து
அசைக்கின்றோம்.
அசைய
மாட்டேன்
என்றது
பாறை.
எங்கிருந்தோ
வந்தார்
அவ்வூர்
காவலர்.
எங்கோ
தகவல்
கொடுத்தார்.
வந்தார்கள் 4
வாலிபர்கள்
சம்மட்டி ,
கடப்பாரையோடு. 20
நிமிடத்தில்
பாறையை
பிளந்து
உடைத்தார்கள் .
கங்கையில்
தள்ளினார்கள்
உடைந்த
பாறைகளை.
1.30
மணி
நேர
போராட்டத்திற்கு
பிறகு
வழி
கிடைத்தது.
மீண்டும்
பயணம். 3.45
க்கு
ஜோஷிமாத்
என்ற
இடத்திற்கு
வந்தோம்.
அங்கிருந்து
பத்ரிநாத் 45
கிலோ
மீட்டர்கள்.
அங்கே
குறிப்பிட்ட
கால
இடைவெளியில்,
ராணுவத்தினர்
கேட்
போட்டிருப்பர்
நாங்கள்
சென்ற
நேரத்தில் 4.30
மணியில்
இருந்து 5.00
மணிவரை
ஒரு
செட்
வண்டிகளை
பத்ரிநாத்
நோக்கி
அனுமதிப்போம்
என்றனர்.
அதன்பிறகு
வரும்
வண்டிகள்
அடுத்த
நாள்
தான்
பத்ரிநாத்
செல்ல
முடியும்.
இறைவனுக்கு
நன்றி
கூறி,
கேட்
திறக்க
காத்திருந்தோம்.....
4.30 க்கு
கேட்
திறந்து
எங்களையும்
மற்ற
வண்டிகளையும்
அனுமதித்தார்கள்.
மீண்டும்
பயணம்.
ஒரு
மணி
நேரத்தில்
ஒன்றன்பின்
ஒன்றாக
பல
வண்டிகள்
நிற்க
நாங்களும்
நிற்கிறோம் .
காரணம்
அதே போன்ற ஒரு பெரிய மலைசரிவு மற்றும் நீர்வீழ்ச்சின்
குறுக்கீடு.
ஒரு
குவாலிஸ்
நீர்வீழ்ச்சியில்
மாட்டிக்கொள்ள,
டிக்கர்
வைத்து
அதை
பின்னாலிருந்து
தள்ள
,குவாலிஸ்
நீர்வீழ்ச்சில்
இருந்து
தப்பித்து
சென்றது.
இதனால்
பெரிய
வண்டிகளை
மட்டும்
அனுமதித்தார்கள் .
இறைவனை
வேண்டியபடியே
நாங்கள்
அந்த
மலைசரிவையும்,
நீர்வீழ்ச்சியையும்
கடந்தோம்.
பத்ரி
நாதர்
திருக்கோவிலை
இரவு 7.30
மணிபோல்
அடைந்தோம்....
அங்கேயே
வாடகைக்கு
அறை
எடுத்து
பொருட்களை
வைத்தோம்.
உடனே
நாராயணனை
காண
கோயிலுக்கு
கிளம்பினோம் .
இங்கு
நடக்க
தேவை
இல்லை.
அறைக்கு
அருகிலேயே
பத்ரிநாதர்
திருக்கோயில். ....
அதோ கோவில்....ஆஹா...புகைப்படங்களில் பார்த்த கோவிலை நேரில் தரிசிக்கிறோமே ...என்ற சிலிர்ப்பு....
ஓம் நமோ நாராயணய நமஹ....பத்ரி நாதா சரணம்........கோவிந்தா.... கோவிந்தா.... கோவிந்தா...
.
.
.
.
இங்கும்
அன்றைய
கடைசி
கால
பூஜை.
கண்ணார
கண்ணனை
கண்டோம். [
அருகிலேயே
லட்சுமி
குபேரரை
தரிசித்தோம்...
வெளியே
வந்தோம் .
கோவில்
நடை
சுற்றி
அங்கிருந்த
லட்சுமி,
ஆஞ்சநேய
சன்னதிகளில்
வணகிவிட்டு,
குழந்தைகளுக்கு
குங்குமம்
இட்டு
பிரசாதம்
வாங்கி
உண்டோம்.
புகைப்படம்
எடுத்தோம்.
எத்திராஜன், நான், ராஜா MGதம்பி செந்தில், மனைவி மகனுடன் அண்ணன் மகனும் [சிவா]
நண்பர் எத்திராஜன் தந்தை, எத்திராஜன் , மனைவி பிரியா, தாய் மற்றும் இரு குழந்தைகள்
தம்பி மகன்[தேவேஷ்வரன்], அண்ணன் மகன் [சிவ வர்னேஷ்வர்]
நண்பர் எத்திராஜன் மனைவியுடன்
நண்பர் ராஜா MG
தம்பி, தேவேஷ், சிவா
யாத்திரைகுழு - பத்ரிநாதர் தலம் முன்....
நிற்பவர்கள்:
பிரியா எத்திராஜன், கார்த்திகா செந்தில், விஜயலட்சுமி மாதவன், விஜய்லெனின்[யாத்திரைக்குழு தலைவர்], ராஜா, அருண்காந்தி, ஆனந்தன், ராமலிங்கம், ராஜாMG , மாதவன்.
அமர்ந்திருபவர்களுக்கு
முன்வரிசை:
தேவேஷ்வரன், சிவ வர்னேஷ்வர், பாபு
இரண்டாம் வரிசை: மணி, பாலாஜி,
மூன்றாம் வரிசை: எத்திராஜன், ஸ்டாலின், செந்தில்,
நான்காம் வரிசை: சந்தியா, சௌந்தர்யா[எக்ஸ்ட்ரா டிக்கெட்]
அறைக்கு
திரும்பினோம்.
வாழ்வில்
முதல்
முறை
கேதரரையும்
பத்ரி
நாதரையும்
தரிசித்த
பூரண
களைப்பில்
தூங்கினோம்.
.
.
.
மறுநாள்
20.08.2010 காலை 4
மணிக்கு
எழுந்து
அங்கும்
காணப்படும்
ஒரு
வெந்நீர்
குளத்தில்
[தப்தகுன்ட்]
குளித்து,
மறுபடியும்
பத்ரி
நாதரை
தரிசிக்க
சென்றோம்....
நிர்மால்ய
தரிசனம்
[காலை
நடை
திறக்கும்
நேரம்
இறைவரை
தரிசிப்பது,]
கண்டோம்.
ஆத்ம
திருப்தியோடு
வெளியே
வந்தோம்.
6.15
க்கு
எங்கள்
பயணம்
ஹர்துவார்
நோக்கி
செல்லும்
பாதையில்
ஆரம்பித்தது .
ஒரு
மணி
நேரத்திற்குள்
வண்டி
நின்றது.
காரணம்
சுமார் 500
மீட்டர்
தூரத்திற்கு
மலைசரிவு .
8
மணிக்கு JCB வந்தது .
30
நிமிடத்தில்
சாலையில்
கிடந்த
மலைகற்களை
தூய்மை
படுத்தியது.
மீண்டும்
பயணம்.
10 நிமிடத்தில் மீண்டும் வண்டி நின்றது.....
முதல்
நாள்
குவாலிஸ்
மாட்டிய
அதே
இடம்.
அதே
பயம்.
முதல்
நாள்
இருந்ததைவிட
மிக
மோசமாக
மலைசரிவு.
அப்போதுதான்
தூய்மை
செய்து
முடித்திருந்தார்கள்.
வண்டி
சக்கரம்
மிகச்சரியாக
சாலை
ஓரமாக
மெதுவாக
செல்கிறது....ஈர
சாலை.
கொஞ்சம்
நகர்ந்தாலும்
வண்டி
விழுந்துவிடும்........
உயிரை
கையில்
பிடித்து,
இறைவனை
வேண்டியபடியே
அவ்விடத்தை
கடந்தோம் .
ஆங்காங்கே
நீர்வீழ்ச்சி
தெரிகிறது.
மலைகள்
தொடர்கிறது .
நதி
பாய்கிறது .
அத்தனையும்
பயம்
கலந்த
மிரட்சியோடு
கண்டு களித்துக்கொண்டே
இரவு 9.30
க்கு
ஹர்துவார்
வந்தடைந்தோம்.
பேசிய
பணத்தை
சிற்றுந்து
ஓட்டுனருக்கு
அளித்து
விட்டு
அய்யப்ப
மடத்தில்
அறை
எடுத்தோம்....
அப்போதும்
ஒருமுறை
கங்கை
நதி
பாயும்
இடத்திற்கு
சென்றோம்.......
[ஹர்துவாரில்
கங்கா
ஆர்த்தி
[கங்கைக்கு
நதிக்கு
விளக்கு
பூஜை]
தினமும்
நடக்கும்...
மிகுந்த
விமரிசையாக பெரு விழாவாக
நடக்கும்.......காண
தவறாதீர்கள்]
அந்த
விழ
நடக்கும்
இடத்திற்கு
சென்றோம்.......
இறைவரின் திருத்தலை நீராம் கங்கை
நதியை
தொழுதோம்
......அங்கே
பொருட்கள்
வாங்கினோம்......மடத்திற்கு
திரும்பினோம்........நிம்மதியாக
தூங்கினோம்.......
21.08.2010. காலை 6.20
க்கு
டெல்லி
நோக்கி
ரயிலில்
பயணம். 11.30
க்கு
டெல்லி
ரயில்
நிலையத்தை
அடைந்தோம்.
அன்று
இரவு 10.30
க்கு
தான்
தமிழ்நாடு
எக்ஸ்பிரஸ்.
எனவே
இருந்த
நேர
இடைவெளியில்
டெல்லி
கரோல்பர்க்
சென்றோம்.
ஷர்டுகள்,
ஜெர்கின்கள்
இன்னும்
சில
பொருட்கள்
வாங்கினோம்.
திரும்ப
ரயில்நிலையம்
வந்தடைந்தோம்.
ரயில்
கிளம்பியது.....மறுநாள்
முழுதும்
ரயில்
பயணம்........
23.08.2010 அன்று
காலை 7.40
மணி
அளவில்
சென்னை
வந்தடைந்தோம்.
யாத்திரை
பயணம்
முடிந்தது .
மறுமுறையும்
இதேபோன்று
இறைதரிசன
அனுபவத்தை
அருள
இறையை
வேண்டி
வணங்கி
ஓம்
நமசிவாய
என்ற
கோஷத்துடன்
யாத்திரையை
முடித்தோம்.
இவ்வுலகத்தில்
உள்ள
அனைத்து
உயிரினங்களும் ,
சகல
சந்தோஷங்களையும்
பெற்று
நோய்நொடி
இல்லாத ,
அமைதியான ,
சந்தோஷமான
,நிம்மதியான
வாழ்க்கை
வாழ
எல்லாம்
வல்ல
இறைவனை
வணங்கிகொள்கிறேன் .
இப்பயணத்தின்போது
நடந்த
பல
சம்பவங்களிலும் ,
அனுபவங்களிலும்
இறைவனை
அறிந்துகொள்ள
,தெரிந்துகொள்ள
,உணர்ந்துகொள்ள
நான்
முயற்ச்சித்தேன் .
சிறிது
உணரவும்
முடிந்தது
என்று
நம்புகின்றேன்.
இதுபோல்
அனுபவம்
ஏற்பட
முதல்
காரணமாய்
இருந்த
எனது
அண்ணன்
விஜய்லெனின் ( 8
வது
முறையாக
இப்பயணம்
மேற்கொள்கிறார்))அவர்களுக்கும்,
இம்முறை
கண்டிப்பாக
வரவேண்டும்
என்று
வற்புறுத்தி
அழைத்து
சென்ற
எனது
தம்பி
செந்தில்
முருகன்(4
வது
முறையாக
இப்பயணம்
மேற்கொள்கிறார்)அவருக்கும் ,
எங்களோடு
வந்த
மற்ற
நண்பர்களுக்கும்
எல்லாம்
வல்ல
இறைவன்
அருள்
புரிய
தொழுகிறேன்.
முடிந்தால்
அனைவரும்
திருக்கேதார
நாதம் ,
பத்ரிநாதம்
சென்று
இறை
நாதம்
பெற இறைவனின்
ஆசிகளை
பிரார்த்திக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.
இப்பயணத்திற்கு
புறப்படும்
முன்
எங்களுக்கு
வாழ்த்துக்கள்
கூறிய
அனைவருக்கும் ,
எங்கள்
நெஞ்சார்ந்த
நன்றிகள்.
எனக்கு
தெரிந்த
தமிழ்நடையில் ,
எழுதி
இருக்கிறேன் .
பிழைகளுக்கு
மன்னிக்கவும்.
நன்றி.
ஜெய்
கேதார்நாத்கி
ஜெய்
ஜெய்
பத்ரினாத்கி
ஜெய்
ஓம்
நமசிவாய
தென்னாடுடைய
சிவனே
போற்றி
என்னாட்டவர்க்கும்
இறைவா
போற்றி
இவ்வாறு யாத்திரைக் கட்டுரை எழுதுவது, பல கட்டுரைகளை எழுத தோன்றுகிறது.....இந்த எண்ணங்களை மனதிற்குள் ஊன்றசெய்த இறைவருக்கும், தங்களுக்கும், மிக்க நன்றி......வணக்கம்......
நன்றி....வணக்கம்.....இறைவன் திருக்கருணையால் மீண்டும் ஒரு யாத்திரைக்கடுரையில் சந்திப்போம்.......

Pray Shiva commands our Kailsh-Manasarovar Yatra.
ReplyDeleteOm shivaya nama.
Ashwinji
Super bro ... Romba super ah iruku .. nangalum poganum nu plan panrom .. paakalam
ReplyDelete